» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெல்லை மாவட்டத்தில் 12,53,264 வாக்காளர்கள்; 10,635 பேர் நீக்கம்: இறுதி வாக்காளர் பட்டியல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:39:15 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் முக்கிய விவரங்கள்: ஆண்கள்: 6,11,601. பெண்கள்: 6,41,518. மூன்றாம் பாலினத்தவர்: 145. மொத்த வாக்காளர்கள்: 12,53,264. பணித்தொகுதி வாக்காளர்கள்: 1,477. புதிதாக சேர்க்கப்பட்டவர்கள்: 60,531 நபர்கள் (இதில் 18,484 பேர் இளம் வாக்காளர்கள்). நீக்கம் செய்யப்பட்டவர்கள்: 10,635 நபர்கள் (இறப்பு, இடப்பெயர்வு மற்றும் இரட்டைப் பதிவு காரணமாக).
வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன: மாவட்டத்திலுள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,678 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 190 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சராசரியாக 1200 வாக்காளர்கள் என்ற விகிதத்தில் இந்த சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பெயர் சேர்க்காத தகுதியுள்ள நபர்கள் (01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள்), அனைத்து வேலை நாட்களிலும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் www.voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது Voters Helpline App (VHA) வழியாக பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள இலவச தொலைபேசி எண் 0462-1950-ஐ தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் மரு.மோனிகா ராணா, சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது: மேயருக்கு மாவட்ட தலைவர் கண்டனம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:47:41 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

குரும்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: வங்கிக்குப் பூட்டு போட்டு மக்கள் போராட்டம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:34:55 PM (IST)

தூத்துக்குடி அண்ணா சிலை பகுதியில் வேகத்தடை: சமக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:06:07 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்: மத்திய அமைச்சர் தகவல்
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:07:34 PM (IST)










