» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது: மேயருக்கு மாவட்ட தலைவர் கண்டனம்!

திங்கள் 23, பிப்ரவரி 2026 8:47:41 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசிய விதம் அராஜகப் போக்கின் உச்சம் என்றும், அரசியல் மிரட்டல் விடுக்கும் செயலை பாஜக ஏற்காது என்றும் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 22.02.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடி VVD சிக்னல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றினார். அப்போது, பாஜக மாவட்ட துணைத் தலைவர் சண்முக சுந்தரம் அவர்கள் மாநகராட்சி ஊழல்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல், மேடை நாகரிகம் இன்றி அரசியல் மிரட்டல் விடுத்துள்ளார்.

"கூட்டம் நடத்த விடமாட்டோம்", "தொண்டர்களை இறக்குவோம்", "30 ஆண்டுகளுக்கு முன் நடந்தது மீண்டும் நடக்கலாம்" என மேயர் பேசியிருப்பது பொது அமைதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். இது போன்ற வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் ஜனநாயகத்திற்கு எதிரானது.

மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் பராமரிப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஒரு எதிர்க்கட்சியின் கடமை. தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஆதாரங்களுடன் விளக்கி வருகிறோம். இதைத் தடுத்து நிறுத்தவே இத்தகைய அவதூறுகளும், அச்சுறுத்தல்களும் பரப்பப்படுகின்றன.

"அராஜக மற்றும் மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது. தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்களை ஆதாரங்களுடன் மக்களிடம் கொண்டு செல்லும் ஜனநாயகப் போராட்டம் தொடரும். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மேயரின் இத்தகைய பேச்சுக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory