» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்: மத்திய அமைச்சர் தகவல்

திங்கள் 23, பிப்ரவரி 2026 4:07:34 PM (IST)



தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைய உள்ளது என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார். 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனாவால்  தொடங்கி வைத்தார். 

வ.உ.சி கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய துறைமுக மெய்நிகர் மாதிரி செயலி உள்ளிட்ட 9 திட்டங்கள், ரூ.12 கோடி மதிப்பிலான 'கொற்கை' சுற்றுலாத் திட்டம், துறைமுக ரயில் சரக்குத் தள இணைப்புச் சாலை மேம்பாடு உள்ளிட்ட 21 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து துறைமுகத்தின் சமுதாய வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பல்வேறு அமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியயதாவது: தமிழகத்தில் நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் துறைமுக மேம்பாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சாகர்மாலா மற்றும் அம்ரித் பாரத் திட்டங்களின் கீழ் துறைமுகங்களை ரயில்வேயுடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மட்டும் தற்போது ரூ.12,600 கோடி செலவில் 111 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தை நாட்டின் முதல் பசுமைத் துறைமுகமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இத்துறைமுகம் ஹைட்ரஜன் எரிசக்தி முனையமாக மேம்படுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைய உள்ளது. ரூ.15,000 கோடி மதிப்பிலான வெளித்துறைமுக வளர்ச்சித் திட்டத்தின் மூலம், துறைமுகத்தின் ஆழம் 18 மீட்டராக அதிகரிக்கப்படும். இதனால் பெரிய கப்பல்கள் வந்து செல்ல வழிவகை ஏற்படும்.

"பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், 2030-ஆம் ஆண்டிற்கான கடல்சார் வணிகத் திட்டம் மற்றும் 2047-ஆம் ஆண்டிற்கான மேம்பாட்டுத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டு இந்திய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் 10,000 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். மேலும், 2070-ஆம் ஆண்டிற்குள் இந்தியா 'கார்பன் உமிழ்வற்ற' (Zero Carbon emission) நாடாக உருவெடுக்கும்," என்று அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன், வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித், துறைமுகச் செயலர் மோகன் குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory