» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திங்கள் 23, பிப்ரவரி 2026 10:25:38 AM (IST)



தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கடன் தொகையை விரைந்து வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேப்பலோடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். கடன் விண்ணப்பம் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை கடன் வழங்கப்படவில்லை. 

இது குறித்து கூட்டுறவு சங்கச் செயலாளரிடம் கேட்டபோது, "மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் மனு நிலுவையில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளனார். இக்குழுக்களில் உள்ள பெண்கள் அனைவரும் சுயதொழில் செய்து வருபவர்கள். கடன் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் அவர்களின் தொழில் முடங்கி, வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

சுயதொழிலை நம்பியுள்ள பெண்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய பரிந்துரை செய்து, தங்களுக்குத் தேவையான கடன் தொகையை விரைந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மல்லிகை, மலர் மற்றும் கடல்கன்னி ஆகிய சுயஉதவிக் குழுக்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory