» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டில் விபச்சாரம்: 2 பெண்கள் கைது!

திங்கள் 23, பிப்ரவரி 2026 8:16:44 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். 2 பெண்கள் மீட்கப்பட்டுள்னர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) முத்துராஜா, சிறப்புச் சார்பு ஆய்வாளர் மல்லிகா மற்றும் பெண் போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் நான்கு பெண்கள் இருந்தனர். விசாரணையில், முனீசுவரி (29) மற்றும் அந்தோணியம்மாள் (39) ஆகிய இருவர் இணைந்து, மற்ற இரண்டு பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபச்சாரம் நடத்திய முனீசுவரி மற்றும் அந்தோணியம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் 2,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory