» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:29:08 AM (IST)
தூத்துக்குடியில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்தவர் கற்பகம் (44). லேசான மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் இவர், நேற்று மதியம் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு வந்துள்ளார். அவர் கடலில் இறங்கி குளிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே அவர் நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடலுக்குப் பிறகு கற்பகம் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது: மேயருக்கு மாவட்ட தலைவர் கண்டனம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:47:41 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

குரும்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: வங்கிக்குப் பூட்டு போட்டு மக்கள் போராட்டம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:34:55 PM (IST)

தூத்துக்குடி அண்ணா சிலை பகுதியில் வேகத்தடை: சமக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:06:07 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்: மத்திய அமைச்சர் தகவல்
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:07:34 PM (IST)










