» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகள் : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 12:07:26 PM (IST)

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி உட்பட பல்வேறு பணிகளை கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் முன்னிலையில் பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார்.
செல்சீனி காலனி மற்றும் திரவியரத்தின நகர் ஆகிய பகுதிகளுக்கான புதிய நியாயவிலைக் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டன. என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் (NTPL) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூபாய் 94.57 இலட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன கழிப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி, 35வது வார்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சி, வி.வி.டி சாலை - பண்டுகரை சாலை சந்திப்பு (4ஆம் ரயில்வே கேட் ஓடை பாலம் அருகில்) பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாநகராட்சி மேயர் பெ. ஜெகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, பிப்ரவரி 2026 9:06:08 PM (IST)

மிரட்டல் அரசியலுக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது: மேயருக்கு மாவட்ட தலைவர் கண்டனம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:47:41 PM (IST)

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: மார்ச் 29ல் தொடக்கம் - இன்டிகோ அறிவிப்பு !
திங்கள் 23, பிப்ரவரி 2026 8:24:24 PM (IST)

குரும்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி: வங்கிக்குப் பூட்டு போட்டு மக்கள் போராட்டம்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:34:55 PM (IST)

தூத்துக்குடி அண்ணா சிலை பகுதியில் வேகத்தடை: சமக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 5:06:07 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம்: மத்திய அமைச்சர் தகவல்
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:07:34 PM (IST)











podhu janamFeb 21, 2026 - 05:52:19 PM | Posted IP 172.7*****