» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

சனி 7, பிப்ரவரி 2026 12:57:30 PM (IST)



மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில்  மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார். 

தூத்துக்குடி புனித லசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, 11-ம் வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். 

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: "மாணவர்கள் தற்காலப் போட்டி உலகிற்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து, படிப்பில் கவனம் சிதறாமல் ஆசிாியர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். கல்வியே உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும் என்றார். 

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய அமைச்சர், பள்ளிக்கு நவீனத் தொடுதிரை (Touch Screen) வசதியையும் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பள்ளி தாளாளர் பிரிட்டோ, தலைமையாசிரியர் ஜான்பால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

ஆமா ஆமாFeb 7, 2026 - 01:19:25 PM | Posted IP 162.1*****

வேலையே கொடுக்கமாட்டாங்க , வேலைவாய்ப்பு முகாம் அமைத்து தற்காலிக வேலை தான் கொடுப்பார்களாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory