» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு!
சனி 7, பிப்ரவரி 2026 9:06:58 PM (IST)

சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த நடைபாதை ஆக்கிரமிப்புப் பிரச்சினை, அதிகாரிகளின் சிறப்பான முயற்சியால் இன்று சுமுகமாகத் தீர்க்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் புதுமனை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அறிவுறுத்தலின்படி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். தாசில்தார் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை உறுதி செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தையால், ஆக்கிரமிப்பு செய்த நபரே தானாக முன்வந்து ஆக்கிரமிப்பை இன்று அகற்றினார். பிரச்சினையை அமைதியான முறையில் கையாண்டு, வழி ஏற்படுத்திக் கொடுத்த எம்.எல்.ஏ, தாசில்தார் மற்றும் சிறப்பாகச் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் ஆகியோருக்குப் பொதுமக்கள் நேரில் சென்று நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

கஞ்சா, கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை!
சனி 7, பிப்ரவரி 2026 8:21:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

தூத்துக்குடியில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
சனி 7, பிப்ரவரி 2026 4:43:15 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் : ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!
சனி 7, பிப்ரவரி 2026 4:20:59 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:11:34 PM (IST)









