» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் : ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!
சனி 7, பிப்ரவரி 2026 4:20:59 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் - மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.02.2026), தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் உள்ள 30 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மண்டல அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் உள்ள 153 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேற்படி கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் -2026-ல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியரால் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாறன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், வருவாய் கோட்டாட்சியர்கள் மி.பிரபு (தூத்துக்குடி), கௌதம் (திருச்செந்தூர்) மற்றும் அரசு துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு!
சனி 7, பிப்ரவரி 2026 9:06:58 PM (IST)

கஞ்சா, கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை!
சனி 7, பிப்ரவரி 2026 8:21:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

தூத்துக்குடியில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
சனி 7, பிப்ரவரி 2026 4:43:15 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:11:34 PM (IST)









