» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
சனி 7, பிப்ரவரி 2026 4:43:15 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நில அதிர்வு கண்காணிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புவியியல் மாற்றங்கள் மற்றும் நில அதிர்வுகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் நோக்கில் இந்த மையம் நவீன தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, கண்காணிப்பு கருவிகளின் செயல்பாடு மற்றும் தரவுகளைப் பதிவு செய்யும் முறை குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்த மையம் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு!
சனி 7, பிப்ரவரி 2026 9:06:58 PM (IST)

கஞ்சா, கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை!
சனி 7, பிப்ரவரி 2026 8:21:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் : ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!
சனி 7, பிப்ரவரி 2026 4:20:59 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் தகவல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:11:34 PM (IST)









