» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமி திடீர் மரணம்: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 7, பிப்ரவரி 2026 10:57:19 AM (IST)
தூத்துக்குடியில் தாயுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மடத்தூர், பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி. இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது மகள் தனுஷா (4) உடன் சிவன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரது மகள் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக மகளை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 4 வயது குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு!
சனி 7, பிப்ரவரி 2026 9:06:58 PM (IST)

கஞ்சா, கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை!
சனி 7, பிப்ரவரி 2026 8:21:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 23 பணியிடங்கள் : பிப்.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:29:54 PM (IST)

தூத்துக்குடியில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் : ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
சனி 7, பிப்ரவரி 2026 4:43:15 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் : ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!
சனி 7, பிப்ரவரி 2026 4:20:59 PM (IST)









