» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடு புகுந்து பெண்ணை துன்புறுத்திய போலீசாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!
புதன் 17, டிசம்பர் 2025 7:57:35 PM (IST)
வீடு புகுந்து பெண்ணை துன்புறுத்திய போலீசாருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மகளிர் ஆணையம் உத்தரவு உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் 2021ல் மகளிர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கணவனால் கைவிடப்பட்ட நான், இரு மகள்களுடன் தனியாக வசிக்கிறேன். என் இளைய மகள் மாற்றுத்திறனாளி. உறவினர் அருண் என்பவரை தேடி, இரவு, 11:00 மணிக்கு, ஆண் காவலர்கள் மூவர், என் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டினர்.
ஆடைகளை களைந்து, ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, 15,000 ரூபாயையும், இரு மொபைல் போன்களையும் பறித்துக் கொண்டனர். போதையில் வந்த அவர்கள், மூன்று மணி நேரம் எங்களை துன்புறுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்து, ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: கணவர் இல்லாமல் வீட்டில் இருந்த பெண்ணை, போலீசார் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் மனித உரிமைகளை, போலீசார் மீறியுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதை, துாத்துக்குடி மேற்கு காவல் நிலைய எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணனிடம் இருந்து, 1 லட்சம் ரூபாய், காவலர் சரவணக்குமார், ஏட்டு பாண்டியராஜ் ஆகியோரிடம் இருந்து, தலா, 50,000 ரூபாயும் வசூலித்துக் கொள்ளலாம். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










