» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3.82 கோடி: 1 கிலோ தங்கமும் கிடைத்தது
புதன் 17, டிசம்பர் 2025 8:11:11 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.81 கோடி பணம் மற்றும் 1 கிலோ 139 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் மாத உண்டியல் எண்ணும் பணி, கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கோயில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமையில் நடந்தது. இணை ஆணையர் க.ராமு முன்னிலை வகித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் தங்கம், நாகவேல், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் கருப்பன், சிவகாமி, ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பணியில் அயற்பணி, கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதன்படி, உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாயும் (ரூ. 3,81,96,785), தங்கம் 1 கிலோ 139 கிராம், வெள்ளி 18 கிலோ 52 கிராம், பித்தளை 36 கிலோ 888 கிராம், செம்பு 1.9 கிலோ மற்றும் வெளிநாட்டு பணத் தாள்கள் 815-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










