» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீட்டை திரும்ப பெற வேண்டும்: ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:03:36 PM (IST)



இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீட்டு சட்டத்தை திரும்ப பெற செய்வதற்கு எல்லா முயற்சிகளையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மேற்கொள்ளும் என அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கே சுவாமிநாதன் கூறியுள்ளார். 

தூத்துக்குடியில் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறுகையில் "இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நியர் முதலீட்டை கொண்டு வருவதற்காக சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டு நலனுக்கோ, இன்சூரன்ஸ் தொழில் நலனுக்கோ பாலிசிதாரர் நலனுக்காக உகந்தது அல்ல என கருதுகிறோம். 

இந்திய நாட்டின் இன்சூரன்ஸ் 1906 இன்சூரன்ஸ் தேசியம் அமைக்கப்பட்ட போது 16 அன்னிய நிறுவனங்கள் இருந்தன. அவை மக்களுக்கு பாதுகாப்பு தரவில்லை மோசடி செயல்களில் ஈடுபட்டது என்பதை வரலாற்று உண்மை பல அந்நிய நாட்டு 100% அணியின் முதலீட்டை அனுமதிப்பதை பாலிசிதாரர்களின் வருவாயை கபலிகரம் செய்து விடுவார்கள். 

இரண்டாயிரத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்ட அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்பது நிறுவனங்கள் அனைத்தும் வெளியே சென்று விட்டது. தேசிய வலிமை பற்றி அதிகம் பேசக்கூடிய இந்த அரசு 2009 ஆம் ஆண்டு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மூன்றாவது முறை ஆட்சியில் 79 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது 2021 ஆம் ஆண்டு 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தேசியம் என்று சொல்லக்கூடிய உலகத்திற்கு இது பொருந்தாது தேசபக்திக்கும் இது பொருந்தாது. இன்சூரன்ஸ் தொழிலில் அந்நிய முதலீட்டை கொன்டு வர எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பிரச்சார இயக்கங்கள் போராட்டத்தை மேற்கொள்வோம். இந்த சட்டத்தை திரும்ப பெற செய்வதற்கு எல்லா முயற்சிகளையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் செய்யும் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory