» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு

திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)



திருச்செந்தூா் கோயில் முன், பக்தா்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பால் சுமாா் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா, சுபமுகூர்த்த தினம் மற்றும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில், கடற்கரை, நாழிக்கிணறு பகுதிகளில் குவிந்தனர்.

சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்களும் அதிகளவில் வந்திருந்ததால் திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது. நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த மணமக்கள், தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர். 

கோவில் சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் வளாகங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகத்தில் மணக்கோலத்தில் இளம்ஜோடிகள் அதிகளவில் காணப்பட்டனர்.

கடல் சீற்றம்

சமீபகாலமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் ராட்சத அலைகள் கரையில் வேகமாக மோதுவதால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலான சுமார் 300 அடி தூரத்துக்கு அரிப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கரையில் இருந்து அரிக்கப்பட்டு சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளமும் உருவாகியுள்ளது.

இதனால் பக்தர்கள் கரையில் இருந்து கடலில் இறங்குவதற்கு சிரமப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக இப்பகுதியில் கோயில் நிா்வாகம் சாா்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் பாதுகாப்புடன் குளிக்குமாறு போலீசார், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் அறிவுறுத்தினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory