» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்து: எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி
சனி 13, டிசம்பர் 2025 10:25:42 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் எல்லை பாதுகாப்புபடை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் இளங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் பாலமுருகன் (49). இவரது மனைவி சரணிகா. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலமுருகன் (49). பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் (BSF) பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று இவர் தனது பைக்கில் மெஞ்ஞானபுரத்தில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தருவைகுளம் அருகே செல்லும் பொழுது எதிரே வந்த வேன், அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் சுடலைமுத்து மகன் கொம்பையா (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: இருசக்கர வாகனம் எரிந்து சாம்பல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:25:46 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: காரில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:02:37 PM (IST)

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 16, மார்ச் 2026 4:50:56 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 16, மார்ச் 2026 4:19:25 PM (IST)

மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை: போலீஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 16, மார்ச் 2026 3:46:56 PM (IST)

துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 16, மார்ச் 2026 3:30:58 PM (IST)








