» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரயில் நிலைய ரயில் பாதை மறு சீரமைப்பு பணிகள் : ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

சனி 13, டிசம்பர் 2025 8:19:25 AM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை போக்குவரத்தை நடைமுறைப்படுத்த ரயில் நிலைய ரயில் பாதைகளின் மறு சீரமைப்பு பணிகள் டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெற இருக்கிறது. 

இந்த மறுசீரமைப்பில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிய நவீன பாதுகாப்பான சிக்னல் முறை நிர்மாணிக்கப்படும். தற்போது 532 மீட்டர் நீளமுள்ள முதல் நடைமேடை 595 மீட்டர்  நீட்டிக்கப்படவுள்ளது.  மேலும் நடைமேடையில்லாமல் ரயில்கள் நிறுத்தும் ரயில் பாதைகள் மற்றும் ரயில் பெட்டி பராமரிப்பு ரயில் பாதைகள் ஆகியவையும் நீட்டிக்கப்பட உள்ளன. 

ரயில் இன்ஜின்கள் ரயிலின் முன்புறத்தில் இருந்து பின்புறத்திற்கு எளிதாக சென்று வர தனி ரயில் பாதைகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு பெட்டி கொண்ட மின்மய பராமரிப்பு ரயில் நிறுத்த தனி ரயில் பாதையுடன் கூடிய சிறு கூடாரம் மற்றும் கடவுப்பாதை மேம்பாடு ஆகியவையும் அடங்கும். 

இதுபோன்ற ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் மீளவிட்டான் ரயில் நிலையத்திலும் நடைபெற இருக்கிறது. கூடுதலாக ரயில் பாதை பராமரிப்பு இயந்திர ரயில் நிறுத்த தனி ரயில் பாதையும், பயணிகள் ரயில் பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க சரக்கு ரயில் பெட்டிகளை ஒருங்கிணைக்க புதிய 750 மீட்டர் நீள தனி ரயில் பாதையும் அமைக்கப்பட உள்ளன. சரக்கு ரயில் பெட்டிகளை பராமரிக்க தனி ரயில் பாதையும் சரக்குகளை கையாளும் பகுதியில் காங்கிரீட் தரைதளம் ஆகியவையும் அமைக்கப்படும்.

இந்த முக்கிய பணிகளுக்காக இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி ரயில்கள் (56726/56723) டிசம்பர் 17 முதல் 23 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

மேலும், திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில்கள் (56722/56721) டிசம்பர் 17, 18, 19, 20, 22, 23 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

இரவு நேர வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி ரயில்கள் (56724/56725) டிசம்பர் 17 முதல் 22 வரை முழுமையாக ரத்து செய்யப்படும். 

டிசம்பர் 14 முதல்  ஜனவரி 27 (2026) வரை பாலக்காட்டில் இருந்த புறப்பட வேண்டிய பாலருவி ரயில் (16792) திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். 

டிசம்பர் 15 முதல் ஜனவரி 28 (2026) வரை தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட வேண்டிய பாலருவி ரயில் (16791) திருநெல்வேலி இருந்து இயக்கப்படும். 

டிசம்பர் 21 முதல் 23 வரை தூத்துக்குடி இருந்து புறப்பட வேண்டிய மைசூர் ரயில் (16235) வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும். 

டிசம்பர் 20 முதல் 22 வரை மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி ரயில் (16236) வாஞ்சி மணியாச்சி மட்டும் வரை இயக்கப்படும். 

டிசம்பர் 19 அன்று குஜராத் ஓஹாவில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி ரயில் (19568) கோவில்பட்டி வரை மட்டும் இயக்கப்படும். 

டிசம்பர் 21 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ஓஹா ரயில் (19567) கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும். 

டிசம்பர் 20 முதல் 22 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய முத்து நகர் ரயில் (12693) வாஞ்சி மணியாச்சி வரை மட்டும் இயக்கப்படும். 

டிசம்பர் 21 முதல் 23 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய முத்து நகர் ரயில் (12694) வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும். என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory