» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் : போலீசார் அதிரடி!
வெள்ளி 12, டிசம்பர் 2025 7:58:40 PM (IST)

விளாத்திகுளத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நூலகம்,மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன, இந்தப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக உள்ளதால் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது. இந்நிலையில் விளாத்திகுளம் காவல்துறை உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து வருமாறு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:11:55 PM (IST)

என்டிபிஎல் சார்பில் புதிய அங்கன்வாடி மையம் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:05:55 PM (IST)

கொங்கராயகுறிச்சி கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:38:10 PM (IST)

பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:33:08 PM (IST)

திமுக கவுன்சிலரால் சேற்றிலும், சகதியிலும் அல்லல் படும் பொதுமக்கள்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:17:54 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் இயற்கை மருத்துவம், யோக அறிவியல் சிறப்பு கருத்தரங்கம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:10:48 PM (IST)










