» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக கவுன்சிலரால் சேற்றிலும், சகதியிலும் அல்லல் படும் பொதுமக்கள்!

வெள்ளி 12, டிசம்பர் 2025 5:17:54 PM (IST)



விளாத்திகுளம் பகுதியில் திமுக கவுன்சிலரால் சேற்றிலும்,சகதியிலும் அல்லல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி 1வது வார்டு சத்யாநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இப்பகுதியில் அம்ரூத் 2.O கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவே பைப் லைன் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலை தற்போது சரி செய்யாமல் உள்ளது.

இந்த வார்டில் திமுகவைச் சேர்ந்த வேல்ஈஸ்வரி நாராயணன் தற்போது கவுன்சிலராக பதவி வைத்து வருகிறார், அப்பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாக்கடை நீரிலும், மழை நீரிலும் மக்கள் சேற்றிலும்,சகதியிலும் நடந்தும், வாகனத்தில் கடந்தும் செல்லும் நிலையில் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் முதியோர் என பலர் தினமும் அல்லல்பட்டு வருகின்றனர்.

திமுக கவுன்சிலரான வேல்ஈஸ்வரி நாராயணன் வீட்டிலிருந்து மேற்கு பகுதியில் நடப்பதற்கு ஏதுவாகவும்,வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாகவும் சரல்,மற்றும் ஜல்லி கற்களினால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேற்றிலும் சகதியிலும் ஒரு சாலை? கவுன்சிலருக்கு ஜல்லி கற்களிலான சாலையா? என விளாத்திகுளம் பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேபோல் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அம்ரூத் 2.0 திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யப்படாமல் தற்போது வரை பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக்கொண்டு பொதுமக்கள் சத்தியநகர் சாலை பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory