» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:33:08 PM (IST)
தூத்துக்குடியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு தொடர்பாக கட்டணம் இல்லா தொலைபேசியில் புகாரினை பொதுமக்கள் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பத்திரிக்கை செய்தி தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்கள் வழியாக துணை நீரேற்று நிலையம் மற்றும் பிரதான நீரேற்று நிலையம் மூலம் தருவைகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வந்தடையும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர பகுதிகளில் சில நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக இயந்திர குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதாரக் கேடு உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதனை உடனுக்குடன் முறைப்படுத்தி சரி செய்திட ஏதுவாக தூத்துக்குடி மாநகராட்சிக்கான கட்டணம் இல்லா தொலைபேசியில் (18002030401) தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்காணும் தொலைபேசியில் தங்களது புகாரினை பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 வருடம் சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:11:55 PM (IST)

என்டிபிஎல் சார்பில் புதிய அங்கன்வாடி மையம் : அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:05:55 PM (IST)

நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் : போலீசார் அதிரடி!
வெள்ளி 12, டிசம்பர் 2025 7:58:40 PM (IST)

கொங்கராயகுறிச்சி கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:38:10 PM (IST)

திமுக கவுன்சிலரால் சேற்றிலும், சகதியிலும் அல்லல் படும் பொதுமக்கள்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:17:54 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் இயற்கை மருத்துவம், யோக அறிவியல் சிறப்பு கருத்தரங்கம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:10:48 PM (IST)










