» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதல்வர் ஸ்டாலினை 2வது முறையாக அரியனையில் அமர வைக்க வேண்டும்: அமைச்சர் பேச்சு!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:46:08 PM (IST)



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இரண்டாவது முறையாக அரியனையில் அமர வைக்க அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று திமுக பொறியாளர் அணி கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்ற வடக்கு மாவட்ட பொறியாளர் அணி பகுதி ஓன்றிய நகர மற்றும் பேரூர் கழக புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் ஆபிரகாம், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். 

ஏற்கனவே தலைவர் கூறியபடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் உறுப்பினர்கள் சேர்க்கயையும் அதிகரிக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்கையில் மாவட்ட கழகத்தோடு இணைந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அதிகப்படியான உறிபினர்களை சேர்ப்பது, துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிக்கு முப்பெரும் விழாவில் கழக வளர்ச்சிக்கான உழைப்பை போற்றும் விதமாக பெரியார் விருது வழங்க பரிந்துரை செய்த தலைவர் தமிழக முதல்வர்க்கு தூத்துக்குடிவடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பாக நன்றியையும் விருதை பெறப்போகும் துணை பொது செயலாளர்க்கு வாழ்த்துகளையும், வருகின்ற 31.08.2025 அன்று கோவையில் வைத்து நடைபெறும் பொறியாளர் அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்திலும் அன்று மாலை நடைபெறும் பொது கூட்டத்திலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, துணை அமைப்பாளர்கள் சின்னத்துரை, ஜாபர், கணேசன், மாநகர அமைப்பாளர் ரூபன், தலைவர் பெரியசாமி, துணை அமைப்பாளர் ஸ்ரீதர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

முட்டாள்Aug 27, 2025 - 02:56:57 PM | Posted IP 172.7*****

எந்த பயனும் இல்லை

srinivasanAug 26, 2025 - 05:14:25 PM | Posted IP 162.1*****

TOTAL WASTE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory