» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 13 ரவுடிகள் கைது: 1 கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:18:56 AM (IST)



தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 13 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் 1கிலோ கஞ்சா, 4 அரிவாள்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் படி, நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன் மேற்பார்வையில் நேற்று இரவு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 சோதனை சாவடிகள் அமைத்தும், 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் (ஆயுதப்படை காவலர்கள்) கொண்ட 8 சிறப்பு குழு அமைத்தும், மொத்தம் 91 காவல் துறையினர் தீவிர வாகன சோதனை, ரோந்து மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் நபர்களை தணிக்கை செய்தும் Operation மாற்றப்பாதை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேற்கண்டவாறு நடைபெற்ற Operation-ல் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் சுமார் 32 நபர்களை தணிக்கை செய்தும், மேலும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 7 நபர்கள் மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேர் என மொத்தம் 13 நபர்களை நேற்று இரவு ஒரே நாளில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து, அவர்களிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சா, 4 அரிவாள்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் வாகன தணிக்கையில், வாகனத்திற்கான உரிய ஆவணம் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றி திரிபவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் மாவட்ட காவல் அலுவலக எண் 0461 2340700, 9498101830 மற்றும் ஹலோ போலீஸ் எண் 95141 44100 ஆகியவற்றிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory