» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நகைக் கடையில் 37 பவுன் திருட்டு : மும்பை தப்ப முயன்ற வாலிபர் சேலத்தில் கைது!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 10:53:28 AM (IST)

தூத்துக்குடி நகைக்கடையில் 37 பவுன் தங்கக் கட்டிகளை திருடிய வாலிபரை சேலம் ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி, டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கேடு, கடையில் இருந்து 37 பவுன் (298.400 கிராம்) தங்க கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் விகாஸ் சண்டேல் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட விட்டல் சண்டே, நேற்று திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச் செல்வதாக தூத்துக்குடி மத்திய போலீசார் சேலம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் நேற்று இரவு 9:30 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் ரயில்வே காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் பயணித்த விட்டல் சண்டேவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 37 பவுன் நகை, ரூ. 43,330 பணத்தை பறிமுதல் செய்து அவரை தூத்துக்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்றிரவு சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










