» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு: செப்.8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:16:45 PM (IST)
2025ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (தாள்-I மற்றும் தாள் - II) அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. அதன்பின், கடந்த ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதுவும் நடக்கவில்லை. 2025 ஆம் ஆண்டிலாவது தகுதித் தேர்வுகள் அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்தாண்டுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (Website: http://www.trb.tn.gov.in) இன்று (11.08.2025) வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தாள்-Iற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறும் . தாள் -II ற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாள் -2 தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் மற்றும் தொடர்புடைய இளங்கியல் கல்வியியல் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் (Graduation and passed or appearing in final year of 2-year Diploma in Elementary Education) . தாள் - I ற்கு தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சியும் தொடக்க கல்வியில் பட்டய படிப்பும் பெற்றிருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










