» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாட்டுப்படகு மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டை: அமைச்சர்கள் வழங்கினார்!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 4:16:45 PM (IST)

தூத்துக்குடியில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் மற்றும் உயிர் காப்பு சட்டையை அமைச்சர்கள் பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது : முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் 2010 ஆம் ஆண்டு மண்ணெண்ணெய் வழங்குவதற்கான இத்திட்டம் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியை சார்ந்த நாட்டுப்படகு மீனவர்களுக்காக தொடங்கப்பட்டது. மேலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மண்ணெண்ணெய் விலை உயர்ந்த பொழுதும் அதனை தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தற்பொழுது தொழில மண்ணெண்ணெய் சந்தை விலையை ரூ. 61.35க்கு கொள்முதல் செய்து 25 ரூபாய் விலையில் மீனவர்களுக்காக வழங்கி வருகிறார்.
இதன்மூலம் அரசு ஒவ்வொரு லிட்டர் தொழிலக மண்ணெண்ணெய்க்கு ரூ. 36.35 மானியமாக கொடுக்கிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட இத்திட்டம் தொடர்ச்சியாக மக்களின் பயனுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இன்றையதினம் 148 பயனாளிகளுக்கு புதிய அட்டை வழங்கப்படுகிறது. மேலும், மீனவர்களாகிய நீங்கள் பதிவு பெற்ற படகு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து, உங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கடற்கரை கிராமத்தை சார்ந்தவர்களுக்கும் புதியதாக மண்ணெண்ணெய் அட்டை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். எனவே, அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், 75 சதவீதம் மானியத்தில் உயிர் காப்பு சட்டை (Life Jacket)யும் வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் மற்றும் உயிர் காப்பு சட்டை வழங்குகின்ற நிகழ்ச்சி இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. பாரம்பரிய நாட்டுபடகு உள்ள மீனவர்கள் எரிபொருளாக மண்ணெண்ணெய் வேண்டும் என தொடர்ந்து பல்வேறு கோரிக்கை வைத்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் பதிவுபெற்ற படகு வைத்திருப்பவர்களை ஆய்வு செய்து, அதற்கான மண்ணெண்ணெய் வழங்குவதற்கான ஆணையினை உத்தரவிட்டார்கள்.
அங்கீகாரமற்ற படகுகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், விடுபட்ட பயனாளிகளும் மனு அளிக்கும்பட்சத்தில் முறையாக இருப்பின், ஆய்வு செய்து அவர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியை சார்ந்த நாட்டுப்படகு மீனவர்களுக்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மண்ணெண்ணெய் வழங்குவதற்கான இத்திட்டம் தொடங்கி வைத்து மானிய விலையில் ரூ.25க்கு வழங்குவதற்கு தொடர்ச்சியாக செயல்பட்டார்கள். மீனவர்களுக்கு மானிய விலையில் ரூ.25க்கு மண்ணெண்ணெய் வழங்குகிறது என்றால், தமிழ்நாடு அரசு மீனவர்களின் நலனை காக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், துண்டில் வளைவு, தடுப்புச் சுவர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கும் மீன்வளத்துறை சார்பாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீனவர்களாகிய உங்களின் பாதுகாப்பு கருதி மானிய விலையில் உயிர் காப்பு மிதவைச் சட்டைகளும் வழங்கப்படுகிறது. உங்களின் உயிர் விலைமதிப்பற்றது. எனவே, இந்த உயிர் காப்பு மிதவைச் சட்டைகளை பெற்று கட்டாயமாக நீங்கள் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்திற்கும் உத்தரவிட்டு தமிழகம் முழுவதும் வழங்கும் பணியை தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 148 அட்டைகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 99 அட்டைகளும், கன்னியாகுமரியில் 80 அட்டைகளும், கன்னியாகுமரி மேற்கு பகுதியில் 898 மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் பெறுவதற்கான புதிய மண்ணெண்ணெய் அட்டைகளை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விடுபட்ட நபர்களும் மனு அளிக்கும்பட்சத்தில் அவர்களுக்கும் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார். எனவே, மீனவர்களின் நலனை காக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்கள்.
இன்றையதினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் 18 பயனாளிகளுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டைகளையும், 37 பயனாளிகளுக்கு உயிர்காப்பு மிதவைச் சட்டைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் பெ.ஜெகன், இணை இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (மண்டலம்) ந.சந்திரா, உதவி இயக்குநர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (மீன்பிடித்துறைமுக மேலாண்மை) க.ஜெனார்த்தனம், புஷ்ரா பேகம், துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
திங்கள் 8, டிசம்பர் 2025 8:35:30 PM (IST)

ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை : எஸ்பி வழங்கினார்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:33 PM (IST)

காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திங்கள் 8, டிசம்பர் 2025 7:56:03 PM (IST)

கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் : செயல் அலுவலர் தர்ரணா போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:46:58 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி துவக்கம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:36:34 PM (IST)

பனை ஓலை வெட்ட முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:23:58 PM (IST)










