» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம்: ரூபி.ஆர்.மனோகரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 3:54:50 PM (IST)



ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமினை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் தொடங்கி வைத்தார்.

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (11.08.2025) நடைபெற்ற இரண்டாம் சுற்று தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகளை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் வழங்கி தொடங்கி வைத்தார்.

தேசிய குடற்புழு நீக்க நாள் திட்டமானது ஆகஸ்ட் 2015 முதல் தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்கநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த 2025 ஆம் வருடத்தின் இரண்டாம் சுற்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்றும் விடுப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 18 ஆம் நாளன்றும் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் அனுசரிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளிலும் அங்கன்வாடி பணியாளர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் இன்று (11.08.2025) மற்றும் 18.08.2025 அன்றும் குடற்புழு நீக்க மாத்திரையான அல்பெண்டசோல் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து), அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைத்து குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.

நமது மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 411683 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 108893 பெண்களுக்கும், இன்று நடைபெறும் முகாமில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மேலும் விடுபட்டவர்களுக்கு 18.08.2025 அன்றும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.

இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ½ மாத்திரை (200 mg), 2 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயது வரை உள்ள பெண்களுக்கு 1 மாத்திரை (400 mg) வழங்கப்படவுள்ளது. குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பாது. இம்மாத்திரை நன்றாக கடித்து மென்று சுவைத்து சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

இக்குடற்புழு மாத்திரை உட்கொள்வதினால் குழந்தைகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், அறிவுத்திறன், உடற்வளர்ச்சியை மேம்படுத்தவும் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகிறது. ஆகவே இம்முகாம்களில் 1 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் அனைவரும் மற்றும் 20 முதல் 30 வரை பெண்களும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு பயனடையுமாறு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தலைவர் முரளிதரன் , மாவட்ட சுகாதார அலுவலர் வேல்முருகன் கணேஷ் , ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் உட்பட மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory