» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்க நடவடிக்கை : ஆட்சியரிடம் மனைவி கோரிக்கை
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:47:28 PM (IST)

வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துளாளர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி மாரியம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எனக்கு 15 வயதுள்ள ஆண் குழந்தை உள்ளது. எனது கணவர் மாணிக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சென்னையை சேர்ந்த சேகர் என்பவரும் கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சப் ஏஜென்ட் பால்துரை என்பவர் மூலம் துபாய் நாட்டில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றனர்.
அந்த கம்பெனியில் 10 நாட்கள் மட்டுமே வேலை செய்தார்கள் பின்பு கம்பெனியிலிருந்து வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. அந்த நாட்டு உரிமை இல்லாமல் சென்றுவிட்டதால் அவர்கள் வேலைக்கு சென்ற கம்பெனியில் உடன் பணி செய்த பஞ்சாபை சேர்ந்த நபர்கள் வெளியில் வெள்ளை கார்டு வாங்கி தருவதாகவும் நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாகவும் பொய் சொல்லி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கணவருடன் சென்ற 5 நபர்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் என் கணவர் மட்டும் துபாய் நாட்டில் சிறையில் சிக்கி தவித்து வருகிறார். அவரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










