» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
சனி 9, ஆகஸ்ட் 2025 8:19:15 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 19ம் தேதி மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 20 மீனவ இளைஞர் ஊர்காவல் படையினரின் பணியிடங்களை நிரப்ப வருகின்ற 19.08.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்க்குட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மேற்படி தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்பவர்கள் படிப்பு சான்றிதழ், வயது நிரூபணத்திற்கான சான்றிதழ், வேலை/தொழில் விபரத்துடன் கூடிய சுயவிபர குறிப்பு (Bio - Data), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2), அசல் சான்றிதழ், மீனவ இளைஞர் என்பதற்கான அடையாள அட்டை மற்றும் நகலுடன் வர வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










