» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:03:23 PM (IST)



வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பதை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் என்ற பெயரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன 

இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் என்பதை கைவிட வேண்டும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பதை கைவிட வேண்டும், வாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் நகர் பஜார் பகுதியில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட செயலாளர் கேபி ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கே.சங்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், ராஜா, புவி ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ராகவன், சுரேஷ், ரவிசந்திரன், நம்பி, ரவி தாகூர், ஶ்ரீநாத், இனிதா, மாநகர் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் ஆனந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory