» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 10:54:56 AM (IST)



தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். 

முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அடங்கும். முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 3,500 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.



இந்நிலையில், வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலையை திறந்து வைத்து, கார் விற்பனையையும் தொடங்கி வைத்தார். விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக அரசு அதிகாரிகள், வின்பாஸ்ட் நிறுவன அதிகாரிகள், தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory