» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்
சனி 26, ஜூலை 2025 10:29:39 AM (IST)

தூத்துக்குடியில் தூய பனிமய மாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடியில் உள்ள திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 443ஆம் ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கொடியேற்றறத்திற்கான சிறப்பு திருப்பலி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றி வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டனர்.
பின்னர் உலக சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது. ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள். சிறு குழந்தைகளை கொடி மரத்தின் முன்பு உட்காரவைத்து வழிபட்டனர்.
விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. வருகிற 3-ந் தேதி நற்கருணை பவனியும், 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும், 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது.

கொடியேற்றும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட்ஜான், கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உட்பட லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










