» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிதம்பரம் நகராட்சியில் இன்று துவக்கி வைத்ததை அடுத்து, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 21, 22 மற்றும் 23 வது வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அழகேசபுரம் பகுதியில் உள்ள ஆனந்தா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இம் முகாமில் 775 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், 99 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள், 59 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட மொத்தம் ஆயிரத்து 1119 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பனோத் ம்ருகேந்தர் லால், உதவி ஆணையர் வெங்கடாசலம், வட்டாட்சியர் முரளிதரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் ஜான்சிராணி, மகேஸ்வரி, தனலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










