» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 3:07:14 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 123வது காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இன்று 15-07-2025 செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் உப தலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்க செயலாளர் ஜெயபாலன் சங்க பொருளாளர் சுரேஷ் குமார் சங்க உறுப்பினர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் வருகை தந்து விழாவினை சிறப்பித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன்,மற்றும் கணேஷ் பேக்கரி உரிமையாளர்கள் இந்திர ராஜா, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி செயலாளர் செல்வம் அட்வகேட், பொருளாளர் பாஸ்கரன் பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார்,கண்ணன், ஆ.செல்வம், பொன்ராமலிங்கம், I. ரவி மாணிக்கம் ஆகியோர் வருகைபுரிந்தனர்.
பள்ளி முதல்வர் பிரபு கல்வி வளர்ச்சி நாளின் கருத்து பற்றி சிறப்புரை ஆற்றினார். மாணவி வீரஷிவானி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவியர் காமராஜர் முகமூடி அணிந்து ஆசிரியர்களோடு ஊர்வலமகாச் சென்று காமராஜர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பின்னர் காமராஜர் பிறந்தநாள் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ் விழாவில் பேச்சு,நடனம், மாணவ மாணவர்களின் உடற்பயிற்ச்சி போன்ற நிகழ்சிகள் இடம் பெற்றன. மாணவிகள் ஜெயஸ்ரீ அனன்யா மற்றும் சுகவர்ணா விழாவினை தொகுத்து வழங்கினர். மாணவி தீபிகா நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை ஒருங்கினைப்பாளர் ஆசிரியைகள் விஜயலட்சுமி, கீதா மற்றும் இரு பால் ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் திரளான பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










