» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாப சாவு
செவ்வாய் 15, ஜூலை 2025 10:04:56 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே மின்சாரம் தாக்கியதில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீபராங்குசநல்லூரை சேர்ந்தவர் காளிதுரை மகன் கேசவகார்த்தீசன் (19). இவர் நெல்லை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். காளிதுரை ஸ்ரீபராங்குசநல்லூர் வாய்க்கால்கரை பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கேசவகார்த்தீசன் புதிய வீட்டு சுவருக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இருந்தபோதும் அவர் பரிதாபமாக பலியானார். அதனைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










