» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் ஷோரூமில் புகுந்து ஊழியரைத் தாக்கியவர் கைது
செவ்வாய் 15, ஜூலை 2025 8:08:31 AM (IST)
கோவில்பட்டியில் பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3 ஆவது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமார் (34). கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் பைக் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றுஅவர் பணியில் இருந்த போது, திடீரென உள்ளே நுழைந்த ஒரு நபர் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கினாராம்.
இதைக் கண்ட மற்ற பணியாளர்கள் சப்தம் போடவே, அவர் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடிவிட்டாராம். தாக்குதலில் காயமடைந்த சதீஷ்குமார், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரைத் தாக்கிய விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொட்டியபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் முத்தையாவை (31) கைது செய்தனர். ஏற்கனவே ஒரு பிரச்சினையில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக சதீஷ்குமாரை அவர் அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










