» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 19ஆம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 11, ஜூலை 2025 4:50:45 PM (IST)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற 19ஆம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி இணைந்து, வேலைதேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 19.07.2025 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 120-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் TATA ELECTRONICS, V.V.TITANIUM PIGMENTS, TVS, KIRLOSKAR, MGM EDIBLE OILES, MRF TCR PLANT, THE JAYARAJ GROUPS மற்றும் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் "TamilNadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் வேலைநாடுநர்கள் (JOB SEEKERS) எனில் CANDIDATE LOGIN -இல் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும், வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது.
இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுநிலை பட்டதாரி, BE, Diploma, Nursing, ITI படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த அரிய வாய்ப்பினை வேலைதேடும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலைநாடுநர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











Vasanth SJul 11, 2025 - 05:18:12 PM | Posted IP 104.2*****