» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கரூர் வைஸ்யா வங்கியின் 3-ம் ஆண்டு துவக்க விழா: இலவச மருத்துவ முகாம்
வியாழன் 19, ஜூன் 2025 5:52:26 PM (IST)

விளாத்திகுளத்தில் கரூர் வைஸ்யா வங்கியின் 3-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கரூர் வைஸ்யா வங்கி கிளையின் 3-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வங்கி கிளையில் கவின் போஸ் மருத்துவமனையுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கிளை மேலாளர் நவீன் ஆபிரகாம் தலைமை வகித்தார். மண்டல அலுவலர் ராகுல் பிள்ளை முன்னிலை வகித்தார்.
இலவச மருத்துவ முகாமில் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு இரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, உடல் பருமன் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மண்டல முதன்மை மேலாளர் செந்தில்குமரன் அறிவுறுத்தலின்படி வங்கி பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










