» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மடத்தூரில் 13ம் நூற்றாண்டின் கமலை கிணற்றினை பாதுகாத்திட தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 8:43:38 AM (IST)
தூத்துக்குடி மடத்தூரில் காணப்படும் 13ம் நூற்றாண்டின் கல்வெட்டோடு கூடிய கமலை கிணற்றினை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் மனு அனுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "எனது கள ஆய்வின் போது கண்டறியப்பட்ட தமிழ் கல்வெட்டோடு காணப்படும் கிணற்றினை முறையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியினை சேர்ந்த முனைவர் த.த.தவசிமுத்து அவர்களை 10.11.2023 அன்று வரவழைத்து ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த கிணறானது எக்காலத்தும் வற்றாத நீறூற்றினை கொண்ட கமலைக்கிணறு, இந்த கிணறானது பொ.ஊ1234ம் ஆண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தினை சார்ந்தது என்பதனை இதில் காணப்படும் மங்கள சொற்களோடு ஆரம்பிக்கும் பாடல் கல்வெட்டின் வாயிலாக புலனாகிறது என்றும், இந்த தகவலானது ஆய்வாளரால் ஆவணம் இதழில் 34ஃ2023 தொகுப்பில் 57ம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கிணறானது தற்போது பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளதால் தயவாய் பாதுகாத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக்கி நமது பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மனன் சுந்தரபாண்டியனின் நல்லெண்ணம் குன்றாது காத்திட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சார்பாக கோரிக்கைகளை பதிவு செய்கின்றோம் என்றார். மேலும், இது தொடர்பாக மாநகர ஆணையாளருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக கோரிக்கையினை சமர்ப்பத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











ஞான செல்வன்Jun 18, 2025 - 06:58:43 PM | Posted IP 104.2*****