» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!!

வெள்ளி 23, மே 2025 5:00:18 PM (IST)



தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் முழு உற்பத்தி திறனை எட்டிய நிலையில் தற்போது 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது

தூத்துக்குடியில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் (மத்திய அரசு 89% மாநில அரசு 11%) என்டிபிஎல் (நெய்வேலி தமிழ்நாடு பவர் லிமிடெட்) அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் இங்கு சுமார் 1400 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். 

இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இணையான ஊதியமும் இதர சலுகைகள் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்த போராட்டத்தின் காரணமாக அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி கடந்த 7.5.2025 முதல் முற்றிலும் (1000 மெகா வாட்) முடங்கியது.

இந்த நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 29 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டு 16.5.2025 முதல் ஒப்பந்த முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இதனைத் தொடர்ந்து அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

16ம் தேதி முதலாவது யூனிட்டில் மின்னு உற்பத்தி தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கியது நேற்று மாலை முதல் அனல் மின் நிலையத்தின் முழு உற்பத்தி திறனை எட்டிய நிலையில் தற்போது அனல் மின் நிலையத்தில் முழு வீச்சில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory