» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழையால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தலா ரூ50 ஆயிரம் நிதி : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.

வெள்ளி 23, மே 2025 4:22:20 PM (IST)



தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.

கடந்த 2023ம் ஆண்டு எதிா்பாராமல் பெய்த கன மழையால் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 49ம் வாா்டு பகுதியில் உள்ள ராஜபாண்டி நகா் எம்.ஜி.ஆர் நகா் பொியசாமிநகா் சத்யாநகா், பகுதியின் அடக்கம், அப்பகுதியை சாா்ந்த 25 குடும்பத்தினருக்கு எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தலா 50 ஆயிரம் வீதம் வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கடந்த காலங்களில் இரண்டு கட்டம் பெய்த கனமழையால் எதிர்பாரா வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பினருக்கும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஓவ்வொரு வகையிலும் உதவிகளை செய்தாா். அது மட்டுமின்றி அனைவருக்கும் தலா 6 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 49வது வாா்டு பகுதியில் முழுமையாக வீடுகளை இழந்தவா்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 குடும்பத்தினருக்கு புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு ஓப்படைக்கபட்டுள்ளது. 

அதே போன்று தற்போது வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு உதவிடும் வகையில் இந்தநிதி உங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த பகுதியை பொறுத்தவரை இரயில்வே மற்றும் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால் அதற்குதகுந்தாற்போல் பணிகளை செய்ய வேண்டியுள்ளது. பெரும் மழைகாலத்தில் எல்லா தரப்பினருக்கும் மாவட்டம் கழகம் சார்பில் உதவிகளை செய்தோம். என்பதையும் நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும் உங்களுக்கான பணிகளை எப்போதும் முதலமைச்சர் வழியில் நாங்கள் செய்து கொடுப்போம் எங்களுக்கு துணையாக இருக்கின்ற சில நிறுவனங்களையும் பாராட்ட கடமைபட்டுள்ளோம். பொதுமக்களும் வரும் காலத்தில் திமுகவிற்கு துணை நிற்க வேண்டும் என்று பேசினாா். 

பின்னா் எஸ்.இ.பி.சி பவா் பிரைேவட் லிமிடெட் சாா்பில் 25 ஆயிரம் வீதம் 15 பேருக்கு காசோலையும் அதே 15 பேருக்கு அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த பணத்தில் 25 ஆயிரம்வீதம் வழங்கியது மட்டுமின்றி மேலும் 10 நபா்களுக்கு 50 ஆயிரம் வீதம் அமைச்சர் கீதாஜீவன் சொந்த பணத்தை வழங்கி அப்பகுதி மக்களை கௌரவித்தாா்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், எஸ்இபிசி பவா் பிரைவேட் லிமிடெட் நிா்வாகத்தலைவர் நரேந்திர அலுவலர் முருகேசன், மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மாவட்ட அணித்தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாவட்ட தகவல் ெதாழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் நாகராஜன், பிரபு, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் வைதேகி, வட்ட அவைத்தலைவர் பொியசாமி. பிரதிநிதி சுடலைமணி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சந்தன முனீஸ்வரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், வார்டு நிர்வாகிகள் முத்துக்குமாா், இளம் பேச்சாளா் முத்துராஜா, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பகுதி இளஞைர் அணி அமைப்பாளர் சூா்யா, மற்றும் மணி அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors


CSC Computer Education




Thoothukudi Business Directory