» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவை

வெள்ளி 23, மே 2025 3:47:36 PM (IST)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் பொது மக்களுக்கு சிறப்பான ஆதார் சேவையை வழங்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 1.37 லட்சம் பயனாளிகள் அஞ்சலகம் மூலம் பயனடைந்துள்ளனர்.

இந்த ஆண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தூத்துக்குடி கோட்டத்தின் அனைத்து தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சேவை 12 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் வசதி தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அளிக்கப்படுகிறது. கடற்கரை சாலையிலுள்ள நியூகாலனி அஞ்சலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த ஏற்பாடு முற்றிலும் பொது மக்களின் வசதிக்காகவும், வேலைக்கு செல்வோரின் ஆதார் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பயனடையும் வகையிலும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களுக்கு ஏற்படும் ஆதார் தொடர்பான சிரமத்தைப் போக்க இந்த அஞ்சலக ஆதார் சேவையை முன்னதாக பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.

தூத்துக்குடி கோட்டத்தில் பிற அஞ்சலகங்களான , ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், சிதம்பரநகர், ஏரல், காயல்பட்டினம், குலசேகரப்பட்டணம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், மேலூர், முதலூர், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லர்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூர், மற்றும் படுக்கப்பத்து ஆகிய அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள்  செயல்பட்டு வருகின்றன.

இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5-7 வயது மற்றும் 15-17 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50, புகைப்படம், கைரேகை, கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ.1௦௦ ஆகும்.

அனைத்து தரப்பு பொது மக்களும் அவ்வப்போது அறிவிக்கப்படும் அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் புதுப்பிக்கப்பட்ட ஆதார் தேவைப்படுவதால் தங்கள் ஆதாரில் புதுப்பித்தல் மற்றும் திருத்தம் செய்ய அருகிலுள்ள ஆதார் அஞ்சலகங்களை அணுகி பயன் பெறுமாறு  தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory