» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: 3 பைக்குகள் பறிமுதல்!

வெள்ளி 23, மே 2025 3:21:28 PM (IST)



தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3  பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளி அருகேயுள்ள ரோட்டில் சந்தேகப்படும்படியாக பைக்குடன் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனை செய்த போது 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பதுதெரியவந்தது. 

இது தொடர்பாக திரேஸ்புரம் மாதவன் காலனி யோனஸ் மகன் மரிய ஜெபஸ்டின் (21), முனியசாமி மகன் மாடசாமி (19) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் மாதா நகர் 1வது தெரு அருகே கஞ்சா விற்பனை செய்த மாதா நகரைச் சேர்ந்த சுந்தரம் மகன் சந்தனகுமார் (22), தாளமுத்துநகர் குணசேகரன் மகன் முத்துக்குமார் 19 ஆகிய 2பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதுபோல் ராமதாஸ் நகரில் உள்ள திருமண மண்டபம் அருகே சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 25 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த குணசீலன் மகன் கனகராஜ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

NAAN THAANமே 23, 2025 - 07:39:47 PM | Posted IP 172.7*****

UPTO 30 GRAM IS JUST A CONSUME VOLUME, ITS JUST A LOW LEVEL PRISIONMENT AND MINIMUM FINE ALSO PROHITABLE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education






Thoothukudi Business Directory