» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்காடு பரி. நாத்தான்வேல் ஆலய அசன விழா
வெள்ளி 23, மே 2025 10:32:05 AM (IST)

காவல்காடு பரி. நாத்தான்வேல் ஆலய கன்வென்ஷன் மற்றும் அசனப் பண்டிகை விழாவில் பேராயர் (பொறுப்பு) செல்லையா கலந்து கொண்டு சபை ஊழியர் இல்லத்தை பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.
ஏரல் அருகேயுள்ள இடையர்காடு சேகரம் காவல்காடு பரி. நாத் தான்வேல் ஆலய அசனப் பண்டிகை விழா, கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று கன்வென் ஷன் கூட்டம் நடந்தது. 21ம் தேதி சபை ஊழியர் இல் லம் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் தூத்துக் குடி-நாசரேத் திருமண்டல பொறுப்பு பேராயர் செல் லையா கலந்து கொண்டு பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் லே செயலாளர் ராஜன் கல்வி நிலவரகுழு செயலாளர் ஜெபச்சந்திரன் திமுக பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ண குமார், திருமண்டல உறுப்பினர் அருள்மேயர், அருண் ஜெபகுமார், சோபன் ஆறுமுகபுரம் எட்வர்ட், நாத்தான்வேல் சபை மூப்பர் எட்வர்ட், தங்கராஜ், சபை பிரமுகர்கள் மற்றும் எனோக் செல்வராஜ், ரத்னதுரை, பால்மோசஸ், ஜெயப்பிர காஷ், ஞானசெல்வன், சாந்தகுமார். சைதை மணி, ஸ்டீபன், ஜெயராஜ், அலெக்ஸ் உள்பட திரளான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருநெல்வேலி திருமண்டல முன்னாள் பேராயர் கிறிஸ்துதாஸ், மகேந்திரன் ஆகியோர் செய்தி அளித்தனர்.
நேற்று அசனப்பண்டிகை விழா நடந்தது. அதிகாலையில் நடந்தஞானஸ்தான ஆராதனை, அசனப்பண்டிகை ஆராதனை, பரி. திருவிருந்து ஆராதனை ஆராதனை நடந்தது. மாலையில் அசன விருந்து நடந்தது. இரவு ஸ்தோத்திர ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருமண்டல உறுப்பினர்கள் சின் னராஜா வினோத்குமார், ஜேம்ஸ் திரவியம், சேகர குரு ஆசாதேவதாஸ், சபை ஊழியர் மனுவேல், சபை தலைவர் ஜேம்ஸ்திரவியம். ஏனோக்செல்வராஜ், ஆபிரகாம் ரத்தினதுரை மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










