» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டில் தீவிபத்து: பொருட்கள் எரிந்து சேதம்

வியாழன் 22, மே 2025 9:53:45 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் சாமி படம் முன்பு விளக்கில் ஏற்றிய தீபத்திலிருந்து  தீ விபத்து ஏற்பட்தால் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதம் ஆனது. 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் மூணாவது தெரு கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரக துரை அவரது மனைவி ஜமுனா இந்நிலையில் கிரகதுரை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட ஜமுனா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் இன்று அவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து மாலை சுமார் 6 மணி அளவில் தனது வீட்டில் பீரோ அருகே அமைந்துள்ள சாமி படங்கள் வைத்து பூஜை செய்யும் பகுதியில் விளக்கில் தீபம் ஏற்றிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு ஜமுனா உறவினர்களுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஜமுனாவின் வீட்டிலிருந்து கரும்புகை வெளியே வர துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெறிவித்தனர். 

இதை தொடர்ந்து அங்கே வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் உடனடியாக தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் தீ விபத்து சம்பவம் குறித்து மத்தியபாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory