» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை : த.வெ.க. கோரிக்கை!!
வியாழன் 22, மே 2025 10:34:20 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு உயிரிழந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அப்பாவி மக்களை சுட்டு வீழ்த்த காரணமான இருந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர் வலியுறுத்தினர்.
மக்கள் கருத்து
KANNANமே 22, 2025 - 01:25:06 PM | Posted IP 162.1*****
ADA PONGADAA..POIE AVA AVA VELAYA PAARUNGA.
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











naan thaanமே 23, 2025 - 07:57:40 PM | Posted IP 162.1*****