» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் துப்பாக்கிக்சூடு தியாகிகள் நினைவு தினம் : தூத்துக்குடியில் அஞ்சலி!

வியாழன் 22, மே 2025 8:56:07 AM (IST)



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.‌

இன்று 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் பாத்திமா நகர் பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்று. பின்னர் ஆலயத்தில் முன்பு உயிரிழந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர். 

இதில் கலந்துகொண்ட போராட்டக் குழுவினர். துப்பாக்கி சுட்டில் பலியான 15 பேருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர். 

திரேஸ்புரம் 

தூத்துக்குடி திரேஸ்புரம் பிரதான சாலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 15 பேரின் உருவ படத்திற்கு தமிழ்நாடு நாட்டுப்படகு சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்கங்களின் மாநில செயல் தலைவர் பலரசம் விநாயகமூர்த்தி, பங்குத்தந்தை செல்வராஜ்,  வணிகர் சங்கங்களின் மாவட்ட தலைவர் தெர்மல்ராஜா,  செயலாளர் விக்னேஷ்,  மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ்,  அலுவலக பொறுப்பாளர் மகாராஜன்,  தமிழக வெற்றி கழகம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வணிகர் சங்க துணை செயலாளர் ரத்தினகுமார், பரதர் நல சங்க பொருளாளர் காஸ்ட்ரோ உள்பட பலர் கலந்து கொண்டனர். 

வணிகர் சங்கம்



தூத்துக்குடி நகர மத்திய வர்த்தகர்களின் சங்கம் சார்பில் மணிநகர் ரோட்டில் உள்ள சங்க அலுவலகம் முன்பு துப்பாக்கிச் சூட்டில் பணியான 15 பேரின் உருவ படங்களுக்கு செயலாளர் தெர்மல் ராஜா தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் விக்னேஷ், நிர்வாகிகள் சந்திரசேகர், மாரிமுத்து, ஜெயக்குமார், சந்திரபோஸ், நவமணி தங்கராஜ், அசோக், தங்கையா, இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Velmuruganமே 23, 2025 - 08:28:21 AM | Posted IP 172.7*****

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே. உன்னிடம் பணம் பெற்ற போலி போராளிகளின் பெயர்களை வெளியிடு

Velmuruganமே 23, 2025 - 08:27:44 AM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே. உன்னிடம் பணம் பெற்ற போலி போராளிகளின் பெயர்களை வெளியிடு

PEOPLEமே 22, 2025 - 09:46:05 AM | Posted IP 172.7*****

please dismantle sterlite from tuty

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory