» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு : அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

புதன் 21, மே 2025 8:09:52 PM (IST)



ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்,சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், களஆய்வு மேற்கொண்டார்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்து 31.01.2024 அன்று தொடங்கி வைத்தார்கள்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம், மாவட்டத்தில் குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். 

இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும், இன்றைய தினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். 

அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் , துறை அலுவலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலித்து, எவ்வித தாமதமும் இன்றி அவற்றை நிறைவேற்றிட வழிவகை காண வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இன்று (21.05.2025) ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதன்படி, ஓட்டப்பிடாரம் வட்டம், கீழக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கே.கைலாசபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 15வது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ் ரூ.4.5 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைகளையும், மருதன் வாழ்வு அரசு துணை சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருட்களின் இருப்புகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, மருதன்வாழ்வு கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளி அழகர்சாமி என்பவருக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணியையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளி செல்வராணி என்பவருக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு கட்டப்பட்டுள்ள கலைஞர் கனவு இல்லம் கட்டுமானத்தினையும், 

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளி அண்ணாமலை என்பவருக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணியையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளி பாலமுருகன் என்பவருக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணியையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளி மணிமேகலை என்பவருக்கு ரூ.3.50 இலட்சம் செலவில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணியையும், 

மருதன்வாழ்வு ஊராட்சிக்குட்பட்ட தெ.அய்யப்பபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பிட்டில் நடைபெற்றுவரும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணியையும், பரிவல்லிக்கோட்டை ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயனாளி சந்திரன் என்பவருக்கு மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ரூ.30 ஆயிரம் முழு மானியத்தில் அமைத்துள்ள ஒருங்கிணைந்த பண்ணைத்திட்ட தொகுப்பினையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒட்டநத்தம் முதல் வாஞ்சிமணியாச்சி வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.4.8 கோடி மதிப்பிட்டில் இடைவெளிச்சாலையினை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தி அமைக்கப்பட்டு வரும் தார்சாலைப் பணியையும், 

வாஞ்சிமணியாச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கடம்பூர், விளாத்திகுளம், புதூர் ஆகிய பேரூராட்சிப்பகுதிகள் மற்றும் 180 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தினையும், வாஞ்சிமணியாச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, புதூர், விளாத்திகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றிங்களைச்சேர்ந்த 363 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பிரதான நீர் உந்து நிலையம் மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, நடைபெற்றுவரும் சோதனை ஓட்டப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பாவையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கீழமங்கலம் பகுதியில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் பயனாளி வே.செல்வகுமார் என்பவருக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் முழு மானியமாக ரூ.6,19,346 வழங்கப்பட்டதில் அவர் 460 அடி ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்புடன் 5 எச்.பி மின் மோட்டார் பம்புசெட் நிறுவி சாகுபடி செய்துவரும் வேளாண் பயிர்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாகுபடி செய்துவரும் பயிரின் விலை நிலவரம் குறித்தும், நிலத்தடி நீர்மட்ட அளவு குறித்தும் விவசாயிடம் கேட்டறிந்தார்.

பின்னர், சில்லாங்குளத்திலுள்ள கூட்டுறவுத்துறை நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் குறித்தும், அரிசி குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு வழங்கப்பட்ட வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருத்துவப் பொருட்களின் இருப்புகள் குறித்தும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். பசுவந்தனையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.35 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டுவரும் தரம் பிரிப்புக்கூடம் மற்றும் உற்பத்திக்கூடத்தின் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, கட்டுமானப் பணியினை தரமாகவும், விரைவாகவும் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். 

தொடர்ந்து, பசுவந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, கிருஷ்ணர் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.13 இலட்சம் வங்கிக் கடனுதவிக்கான காசோலையை வழங்கினார். ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து, பத்திரப் பதிவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் , பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, திருமண உதவித் தொகை, நிவாரணத் தொகை, தற்காலிக இயலாமைக்கான உதவித் தொகை என 51 பயனாளிகளுக்கு ரூ.17,41,515 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.11,200 மானிய விலையில் இடுபொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (கோவில்பட்டி) ஜெகன் மோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், உதவி கோட்டப் பொறியாளர் விஜயசுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல் துறை) சங்கரநாரயணன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த், மருத்துவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory