» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விடையில்லா வினாக்கள் நூல் வெளியிட்டு விழா

புதன் 21, மே 2025 3:52:19 PM (IST)



தூத்துக்குடியில் ஆயர் இல்ல வளாக அரங்கில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 27-ஆவது நிகழ்வு நடைபெற்றது.

புலவர் சு. முத்துசாமி வரவேற்றார். கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச நட்சத்திரத் திரைப்பட விழாவில் தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த "திரு" படக்குழுவினருக்கு பாராட்டினார்கள்.  "திரு" பட இயக்குனர் அருந்ததி அரசு தொடுவானம் சார்பில் கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன் பொன்னாடை போற்றினார். முத்தாலங்குறிச்சி காமராசு நினைவுப் பரிசு வழங்கினார்.

"திரு" குறும்படம் குறித்து ஆசிரியர் பிரபாவதி பேசினார். "திரு"படத்தில் நடித்த திருநங்கை செவிலியர் பிரியதர்ஷினி , ஆ. பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பேசினர். பட இயக்குனர் சோ. அருந்ததி அரசு ஏற்புரை வழங்கினார். எழுத்தாளர் ஏ. சாந்தி பிரபு எழுதிய "விடையில்லா வினாக்கள்" சிறுகதைத்தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. நூலை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வெளியிட தொடுவானம் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் நெல்லை தேவன் பெற்றுக்கொண்டார்.

நூல் குறித்து செய்யது முகமது ஷெரீப் , கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன், கலைவளர்மணி ப. சக்திவேல் , நெடுஞ்சாலைக்கவிஞர் செல்வராஜ், எழுத்தாளர் ஆர். சாந்தி ஆகியோர் வாழ்த்திபேசினர். நூலாசிரியர் ஏ. சாந்தி பிரபு ஏற்புரை வழங்கினார். இலக்கிய ஆர்வலர் செ. லாரன்ஸ் நன்றி கூறினார். தலைவர் துரை கணேசன், தமிழ் முனை புத்தக வாசிப்பு வண்டி வாசகர்கள் சைமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory