» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூரில் முழு நேர மருத்துவமனை : எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை
புதன் 21, மே 2025 3:47:32 PM (IST)

செய்துங்கநல்லூர் துணை சுகாதார நிலையத்தினை முழுநேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏவிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், "செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இந்த ஊரை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என்று தாங்கள் சட்டமன்றத்தில் பேசி வருகீறார்கள். உங்களுக்கு மிக்க நன்றி. செய்துங்கநல்லூர் நெல்லை & திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைத்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
விபத்தில் மாட்டி கொள்பவர்களை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். எனவே செய்துங்கநல்லூர் துணை சுகாதார நிலையத்தினை அரசு சுகாதார நிலையமாக முழுநேர மருத்துவமனையாக மாற்றி தரவேண்டும்.
இந்த மருத்துவமனையுடன் வல்லநாடு மருத்துவனையின் கீழ் இயங்கி வரும் வி.கோவில்பத்து, விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, ஆழிகுடி, வசவப்பபுரம், மு.கோவில்பத்து, கீழப்புத்தனேரி, மு.புதுக்கிராம் பஞ்சாயத்துகளை இணைத்து செய்துங்கநல்லு-ர் அரசு மருத்துவமனையை நிறுவ வேண்டும். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பலன் பெறுவார்கள். செய்துங்கநல்லூரில் அரசு நூலக கட்டிடத்தில் காலியாக உள்ள கட்டிடத்தில் ஊர்வசி இலவச அகடாமி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
செய்துங்கநல்லூர் தவ்கீத் ஜமாத் சார்பில் அப்துல் என்பவர் கொடுத்த மனுவில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஊர்வசி அமிர்த ராஜ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










